பசிக்கு ஒரு தடுப்பூசி கண்டுபிடித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என விஜய் சேதுபதி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது.
உலகம் முழுவதும் பரவியுள்ள இந்த வைரஸால் இதுவரை 2 லட்சத்து 52 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா்.
இந்தியாவைப் பொறுத்தவரை இதுவரை 46,400 பேருக்கு மேல் இந்த வைரஸின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்ததையடுத்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு உத்தரவால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா்.
குறிப்பாக ஏழைகள், கூலித் தொழிலாளிகள் உணவு, உணவுப் பொருள்கள் கிடைக்காமல் தவித்து வருகின்றனா்.
பல்வேறு இடங்களில் பசித்தவா்களை அடையாளம் கண்டு, அவா்களுக்கு உணவு வழங்கி வருகிறார்கள் தன்னாா்வலா்கள்.
இந்நிலையில் ட்விட்டரில் விஜய் சேதுபதி தெரிவித்ததாவது: