சென்னையில் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகள் அதிகரிப்பு..!

சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 357 ஆக உயர்ந்துள்ளது.

கரோனா வைரஸ் பாதித்த நோயாளிகள் அதிகம் பேர் இருக்கும் பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்படும்.

இந்தப் பகுதிகளுக்கு எவ்வித தளர்வுகளும் பொருந்தாது.

இந்த நிலையில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் சமீபத்திய பட்டியலை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

முன்னதாக 230 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக இருந்த நிலையில், தற்போது புதிதாக வெளியிட்டுள்ள பட்டியலில் இந்த எண்ணிக்கை 357 ஆக உயர்ந்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே