பாஜக வங்கி கணக்குகளை முடக்க வேண்டும் – கொந்தளிக்கும் கார்கே..!!

பாரத ஸ்டேட் வங்கியின் தேர்தல் நன்கொடை பத்திரம் மூலம் ரூபாய் 6,000 கோடி பாஜக பெற்றுள்ளது இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள பட்டியலில் அம்பலமாகியுள்ளது.

இதுகுறித்து கர்நாடக மாநிலம் பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே “காங்கிரஸ் கட்சியின் கணக்குகள் முடுக்க வருமானவரித் துறைக்கு பாஜக தான் அறிவுறுத்தியது.

இதன் மூலம் சுமார் 300 கோடி ரூபாய் முடக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி உள்ள சூழலில் கட்சியின் தேர்தல் செலவினங்கள் எப்படி மேற்கொள்ளப்படும். ஆனால் அவர்களின் (பாஜக) வங்கிக் கண்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை.

இது குறித்து உயரமட்ட விசாரணை. விசாரணையில் உண்மை வெளி வராத பட்சத்தில் பாஜகவின் வங்கி கணக்குகளை முடக்க வேண்டும். தேர்தல் நன்கொடை பத்திரம் மூலம் மட்டுமே ரூபாய் 6000 கோடி நன்கொடையை பாஜக வசூலித்துள்ளது” என குற்றம் சாட்டியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே