தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து ரோகித் சர்மா விலகல்..!!

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரிலிருந்து துணை கேப்டன் ரோஹித் சர்மா காயம் காரணமாக விலகியுள்ளார்.

தென் ஆப்பிரிக்கா, இந்தியா இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் டிசம்பர் 26-ம் தேதி தொடங்குகிறது. இதற்கான இந்திய அணி மும்பையில் 3 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்திய அணி தனி விமானம் மூலம் 16-ம் தேதி தென் ஆப்பிரிக்கா புறப்படுகிறது.

இந்த நிலையில், துணை கேப்டன் ரோஹித் சர்மா காயம் காரணமாக விலகியுள்ளார். மும்பையில் நேற்று பயிற்சியில் ஈடுபட்டபோது காயம் ஏற்பட்டதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து, அவருக்குப் பதில் பிரியங்க் பஞ்சால் மாற்று வீரராக இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்தத் தொடரிலிருந்துதான் ரோஹித் சர்மா துணை கேப்டன் என அறிவிக்கப்பட்டார். அவர் தற்போது காயம் காரணமாக விலகியுள்ளதால், துணை கேப்டன் குறித்த தகவல் எதுவும் பிசிசிஐ அறிவிப்பில் இடம்பெறவில்லை.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே