பல மணி நேரம் செல்போன் பார்ப்பவருக்கான ஒரு எச்சரிக்கை கருவி கண்டுபிடிப்பு..!!

சாலைகளில் நடக்கும் போது எதிரே வாகனங்கள் வந்தாலும், ஆட்கள் வந்தாலும் ஆபத்தை பொருட்படுத்தாமல் மெய்மறந்து செல்போன்களுடன் நடப்பவர்களை உஷார் படுத்தும் கருவி ஒன்றை தென்கொரிய வடிவமைப்பாளர் ஒருவர் உருவாக்கியுள்ளார்.

ரோபாட்டிக் கண் என கூறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இதற்கு மூன்றாம் கண் என Paeng Min-wook என்ற அந்த 28 வயது வடிவமைப்பாளர் பெயரிட்டுள்ளார்.

செல்பொனை பார்ப்பதற்காக தலையை குனியும் போது, சென்சர் உதவியுடன் இந்த மூன்றாவது கண் திறக்கும். 2 மீட்டருக்குள் எதிரே வாகனமோ வேறு ஆட்களோ, மோதும் வகையில் வந்தால் பீப் பீப் ஒலி எழுப்பி இந்த மூன்றாவது கண் எச்சரித்து ஆபத்தில் இருந்து தப்ப உதவும்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே