பிரேமம் படத்தில் நிவின் பாலிக்கு முன்னர் ஹீரோவாக நடிக்க இருந்தது யார் தெரியுமா?

அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நிவின் பாலி நடிப்பில் சாய்பல்லவி துணையுடன் உருவான படம் பிரேமம். இந்தப் படம் மலையாள சினிமாவை தாண்டி தென்னிந்தியா முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றது .

இந்த படத்தில் நிவின்பாலி, மடோனா செபாஸ்டியன், அனுபமா பரமேஸ்வரன் போன்ற பலரும் நடித்திருந்தார்கள். தமிழகத்தில் மட்டும் 200 நாட்கள் ஓடியது. இந்நிலையில் இந்த படத்தின் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் யாரும் அறியாத தகவல் ஒன்றைப் பற்றிக் கூறியுள்ளார் .

முதன் முதலில் இந்த படத்தில் துல்கர் சல்மானைத்தான் நடிக்க வைப்பதாக இருந்தாராம். அதன் பின்னர் தயாரிப்பாளர் தலையீடு காரணமாக நிவின்பாலி இந்த படத்தில் நடிக்க வைக்கப்பட்டார் என்று கூறியுள்ளார் அல்போன்ஸ் புத்திரன்.

Premam| NivinPauly DulquerSalman| Saipallavi

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே