ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் தாக்கல் செய்த ஜாமீன் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை 26ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் உள்ளார்.

சிபிஐ வழக்கில் ப சிதம்பரம் ஜாமீன் பெற்று இருக்கும் நிலையில், அமலாக்கத்துறையின் வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் சிதம்பரத்தின் ஜாமின் மனுவை கடந்த 16ஆம் தேதி நிராகரித்துவிட்டது.

டெல்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ப சிதம்பரம் தாக்கல் செய்த மனு நீதிபதிகள் பானுமதி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.

ப சிதம்பரம் தரப்பில் ஆஜரான கபில்சிபல் அபிஷேக் மனு சிங்வி ஆகியோர் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டு ப சிதம்பரம் மூன்று மாதங்களுக்கு மேலாக சிறையில் உள்ளதால் ஜாமின் வழங்க வேண்டும் என்று வாதிட்டனர்.

அப்போது அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான துஷார் மேத்தா விசாரணையை தங்கள் தரப்பு விளக்கத்தை வருகிற 25-ஆம் தேதி தாக்கல் செய்வதாக கூறினர்.

அதை ஏற்று வழக்கு 26ம் தேதிக்கு நீதிபதி பானுமதி ஒத்திவைத்தார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே