நட்புக்காக அல்ல, தமிழகத்தின் நலனுக்காகவே நடிகர் ரஜினிகாந்த் உடன் இணைவேன் : கமல்ஹாசன்

நட்புக்காக அல்ல தமிழகத்தின் நலனுக்காகவே நடிகர் ரஜினிகாந்த உடன் இணைவேன் என மக்கள் நீதி மய்ய தலைவர் கமலஹாசன் தெரிவித்துள்ளார்.

ஒடிசா பல்கலைக்கழகத்தில் கௌரவ டாக்டர் பட்டம் பெற்றதற்காக ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்ய கட்சி அலுவலகத்தில் கமலஹாசனை சந்தித்த கட்சி நிர்வாகிகள் பாராட்டு தெரிவித்தனர்.

அப்போது பேசிய அவர், மக்கள் நீதி மய்ய கட்சி இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு, விவசாயம் போன்றவற்றை முக்கியமானவை என்பதை மக்கள் நீதி மையம் உணர்ந்து உள்ளதாக கூறினார்.

மேலும் ரஜினியுடனான நட்பை விட தமிழகத்தின் நலனே முக்கியம் என்றும் அந்தக் காரணத்திற்காகவே அவருடன் இணைய இருப்பதாகவும் கமலஹாசன் தெரிவித்தார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே