இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இந்திய அணி நாளை அறிவிக்கப்பட உள்ளது.
மேற்கிந்திய தீவுகள் அணி இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாட உள்ளது.
இதற்கான இந்திய அணி நாளை அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகக் கோப்பை தொடருக்கு பின் இந்திய அணியில் இடம்பெறாமல் இருந்த மகேந்திர சிங் தோனி, ராஞ்சியில் தீவிர வலைப்பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணியில் அவர் இடம்பெறுவார் என அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர்.
இந்தியா-மேற்கிந்தியா தீவுகள் மோதும் முதல் டி20 போட்டி டிசம்பர் 6ம் தேதி தொடங்க உள்ளது.