சென்னை விருகம்பாக்கத்தில் விஜய்சேதுபதியின் அலுவலகத்தை முற்றுகையிட்டு வணிகர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.
மண்டி செயலி தொடர்பான விளம்பரத்தில் இருந்து நடிகர் விஜய் சேதுபதி விலக வலியுறுத்தி சென்னை ஆழ்வார் திருநகரில் உள்ள அவரது அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற வணிகர்கள் கைது செய்யப்பட்டனர்.
பலசரக்கு விற்பனை சார்ந்த அனைத்து வியாபாரிகளையும் உள்ளடக்கி அவர்களுக்குள் பொருட்களை விற்றுக் கொள்ளவும், வாங்கிக் கொள்ளவும் வழிவகுக்கும் மண்டி செயலியால், தங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
எனவே இந்தச் செயலி தொடர்பான விளம்பரத்தில் இருந்து விஜய் சேதுபதி உடனடியாக விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆழ்வார் திருநகரில் உள்ள அவரது அலுவலகத்தை 200க்கும் மேற்பட்ட வணிகர்கள் முற்றுகையிட முயன்றனர்.
அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.