பெட்ரோல் மற்றும் டீசல் மீண்டும் உயர்வு..; இன்றைய விலை நிலவரம்..!!

சென்னையில் ஒரு நாள் இடைவெளிக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை நேற்று மீண்டும் உயர்ந்தது.

கடந்த 13 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது.

நேற்று முன்தினம் ஒருநாள் மட்டும் விலை உயர்வின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.92.59-க்கும், டீசல் ரூ.85.98-க்கும் விற்பனை ஆனது.

இந்நிலையில், ஒருநாள் இடைவெளிக்கு பிறகு நேற்று மீண்டும் விலை உயர்ந்தது.

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 31 காசு உயர்ந்து ரூ.92.90-க்கும், டீசல் 33 காசு உயர்ந்து ரூ.86.31-க்கும் விற்பனை ஆனது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே