போராட்டத்தில் இறங்கிய டெல்லி போலீசார்

நீதிமன்ற வளாகத்தில் வைத்து தாக்குதல் நடத்திய வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தில் டெல்லியில் சீருடையுடன் போலீசார் போராட்டம் நடத்தி வருவதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவுகிறருது.

கடந்த சனிக்கிழமை அன்று திஸ் ஹசாரி நீதிமன்ற வளாகத்தில் வாகனங்களை நிறுத்துவது தொடர்பாக போலீசாருக்கும் வழக்கறிஞர்களுக்கும் மோதல் ஏற்பட்டது.

இந்த மோதலால் நீதிமன்றம் போர்க்களமானது. வாகனங்கள் சூறையாடப்பட்டு தீயிட்டுக் கொளுத்தப்பட்டன.

இந்த மோதலில் 20 போலீசாரும் சில வழக்கறிஞர்களும் காயம் அடைந்தனர்.

இதேபோல் நேற்றும் கர்கர்டூமா நீதிமன்றத்தில் போலீசார், வழக்கறிஞர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.

மேலும் சாலையில் வைத்து போலீஸ் ஒருவரை வழக்கறிஞர்கள் தாக்கும் வீடியோவும் வெளியாகி அவர்களுக்குள் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் வழக்கறிஞர்கள் தொடர் மோதல் போக்கில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டியும் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், ஐ.டீ.ஓ பகுதியில் உள்ள காவல்துறை தலைமையகத்தை சீருடையுடன் போலீசார் முற்றுகையிட்டனர்.

எதிர்ப்பை பதிவு செய்யும் விதமாக கருப்பு ரிப்பன்களை அவர்கள் கட்டி இருந்தனர்.

போலீசாரை தாக்கிய வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

போலீசாரின் போராட்டத்திற்கு ஆதரவாக ஐ.பி.எஸ். அதிகாரிகள் பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

இதுஒருபுறமிருக்க, வழக்கறிஞர்களும் போலீசாருக்கு எதிராக போராட்டத்தில் இறங்கியுள்ளதால், டெல்லியில் பரபரப்பு நிலவுகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே