இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தனது பிறந்தநாளையொட்டி உருக்கமான கடிதம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
விராட் கோலி இன்று தனது 31வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
அவருக்கு ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் பலர் வாழ்த்து கூறி வருகிறார்கள்.
இந்நிலையில், விராட் கோலி அவரது ட்விட்டர் பக்கத்தில் தன்னுடைய பயணம் மற்றும் வாழ்க்கை கற்றுத்தந்த பாடம் குறித்து பல சுவாரஸ்ய தகவல்களை கடிதமாக எழுதி பதிவிட்டுள்ளார்.
அதில் பலருக்கு உங்களை பிடிக்கும் சிலருக்கு பிடிக்காது; ஆனால் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாதீர்கள் என குறிப்பிட்டுள்ளார்.
மனம் சொல்வதை கேளுங்கள் என கூறியுள்ள விராட் கோலி, கனவுகளைத் துரத்தி உங்களை உலகிற்கு வெளிக்காட்டுங்கள் என்று தெரிவித்துள்ளார்.