மே மாத ஜிஎஸ்டி வசூலும் 1 லட்சம் கோடியைத் தாண்டியது..!!

கொரோனா இரண்டாவது அலைப் பாதிப்பால் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்ட மே மாதத்தில் நாட்டின் சரக்கு சேவை வரி வருவாய் ஒரு லட்சம் கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது.

மாதந்தோறும் சரக்கு சேவை வரி மூலம் பெறப்பட்ட வருவாய் குறித்த விவரங்களை மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டு வருகிறது.

மே மாதத்தில் ஒரு லட்சத்து இரண்டாயிரத்து 709 கோடி ரூபாய் வருவாயாகப் பெறப்பட்டுள்ளதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதில் மத்திய அரசின் வரியாக 17 ஆயிரத்து 592 கோடி ரூபாயும், மாநில அரசுகளின் வரியாக 22 கோடியே 653 கோடி ரூபாயும் பெறப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே