மகனுக்கு தல அஜித் என்று பெயர் சூட்டிய ரசிகர்

நடிகர் அஜித் மீதான தீராத பற்றினால் மதுரையைச் சேர்ந்த ரசிகர் ஒருவர் தனது மகனுக்கு தல அஜித் என்று பெயரிட்டுள்ளார்.

ஜெயஹிந்த்புர பகுதியைச் சேர்ந்த மதுரைவீரன் ஜோதிலட்சுமி ஆகிய இருவர் அஜீத்தின் தீவிர ரசிகர்கள். இந்த தம்பதி தங்களுக்கு பிறந்த இரண்டாவது மகனுக்கு தல அஜித் என பெயர் சூட்டியுள்ளனர்.

பிறப்பு சான்றிதழ் ஆதார் அட்டை குடும்ப அட்டை என அனைத்திலும் தல அஜித் என்றே பதிவு செய்துள்ளனர்.

பள்ளியில் இவருக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டையிலும் தல அஜித் என்று இருப்பது சமூக வலைதளங்களில் அனைவராலும் பகிரப்பட்டு வருகிறது.

அஜித் பிறந்தநாளில் தங்கள் திருமணம் செய்து கொண்டதாகவும், வாழ்நாளில் ஒரு நாளாவது அஜித்தை நேரில் சந்திக்க வேண்டும் என்பதே தங்களுடைய ஆசை என்றும் தம்பதி கூறுகின்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே