நடிகர் விஜய் நடிப்பதுடன் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும், மேடையில் கருத்து சொல்ல வேண்டாமெனவும் இயக்குனர் சாமி எச்சரித்துள்ளார்.
தமிழில் சிந்து சமவெளி, உயிர், மிருகம் ஆகிய படங்களை இயக்கியவர் சாமி. இவர் நடிகர் விஜய்யை விமர்சித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பிகில் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில், யாரை எங்கு வைக்க வேண்டுமோ அங்கு வைத்தால் எல்லாம் சரியாக அமையும் என்று விஜய் பேசியதை சுட்டிக்காட்டியுள்ள சாமி, இயற்கையும் கடவுளும் அவரவர்களை அங்கு தான் வைத்திருக்கிறது என்று கூறியுள்ளார்.
எந்த விதத்தில் 50 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறீர்கள் என்று விஜய்க்குள் கேள்வி எழுப்பியுள்ள சாமி, கருப்பு பணமாக சொத்து வாங்கிக் கொள்கிறீர்கள் எனவும் விமர்சித்துள்ளார்.
எவ்வளவு நாள் தான் தமிழகத்தை ஏமாற்ற முடியும் என வினவியுள்ள சாமி, ஒருநாள் சாயம் வெளுக்கும் எனவும் எச்சரித்துள்ளார்.