விஜய் 64 திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்

விஜய் நடிக்கும் 64 ஆவது திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.

பிகில் படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜய் நடிக்கும் புதிய படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இவர் ஏற்கெனவே மாநகரம், கைதி ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் ஆவார்.

அவர் இயக்கும் புதிய படத்தில் விஜய் சேதுபதி, சாந்தனு, மாளவிகா மோகனன் ஆகியோர் விஜயுடன் இணைந்து நடிக்க உள்ளனர். அனிருத் இசை அமைக்க உள்ளார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்புக்கான இடங்களை தேர்வு செய்யும் பணியில் குழு ஈடுபட்டிருந்தது.

தற்போது அந்தப் பணிகள் நிறைவடைந்ததை அடுத்து சென்னை தரமணியில் படபூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

அதன்படி இன்று நடைபெற்ற படபூஜையில், விஜயும், விஜய் சேதுபதியும் ஒன்றாக கலந்து கொண்டனர். படக் குழுவினர் அனைவரும் படபூஜையில் பங்கேற்றனர். இதுதொடர்பான புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே