ஆமைகளை காப்பாற்றிய முகம் தெரியாத இளைஞர்கள்

அமெரிக்காவில் சாலைகளில் ஆங்காங்கு கிடந்த ஆமைகளை மீட்ட முகம் தெரியாத இளைஞர்களை பலரும் பாராட்டி வருகின்றனர்.

டெக்ஸாஸில் உள்ள சைப்ரஸ் பகுதியில் இரு இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, சாலையைக் கடக்க முயன்ற ஆமைகள் மறுபுறம் ஏற முடியாமல் ஆங்காங்கு சிதறிக் கிடந்தன.

இதனைக் கண்ட அந்த இளைஞர்கள் ஆமைகளை ஒவ்வொன்றாக எடுத்து சாலையின் மறுபுறம் உள்ள புற்கள் அடங்கிய பகுதியில் விடுவித்தனர். இதேபோல் 100க்கும் அதிகமான ஆமைகளை இருவரும் காப்பாற்றினர்.

இதுதொடர்பான வீடியோ வெளியான பலரும் அந்த இளைஞர்களை சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே