பைனான்சியர் அன்பு செழியன் வீட்டிலிருந்து கட்டுக் கட்டாக பணம் பறிமுதல்!

வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் வீட்டில் இருந்து 65 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பிகில் திரைப்பட தயாரிப்பு நிறுவனமான ஏ.ஜி.எஸ். நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களிலும், நடிகர் விஜய்யின் வீடுகளிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

இதே போன்று பிரபல திரைப்பட பைனான்சியர் அன்புச்செழியன் வீடுகள் மற்றும் நிறுவனங்களில் கடந்த இரண்டு நாட்களாக வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே அன்புச்செழியன் வீடுகளில் இருந்து கணக்கில் வராத 65 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை தியாகராயநகர் வீட்டில் இருந்து 50 கோடி ரூபாயும், மதுரை வீட்டில் இருந்து 15 கோடி ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே