மாஸ்டர் படத்தின் டீசர் நவம்பர் 14 ஆம் தேதி மாலை 6 மணிக்கு தீபாவளி விருந்தாக வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து படத்தயாரிப்பு நிறுவனம் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில், “பக்குவமா சொல்லும் போதே கேட்டுக்கோங்க செல்லம்
தீபாவளி விருந்து இங்கே…
மாஸ்டர் படத்தின் டீசர் நவம்பர் 14 ஆம் தேதி மாலை 6 மணிக்கு சன் தொலைக்காட்சியின் யூடியூப் பக்கத்தில் வெளியாகும்” என்று பதிவிட்டுள்ளது.
டீசர் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டாலும், படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. மாஸ்டர் படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.