டெங்கு கொசு பரவ காரணமாக இருந்ததாக சென்னையில் ஜோமோட்டோ நிறுவனத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சேத்துப்பட்டில் உள்ள ஜோமோட்டோ நிறுவனத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்த போது, அந்நிறுவனத்தின் மாடியில் டெலிவரி பைகள் கிடந்துள்ளன.
அந்த பைகளில் மழை நீர் தேங்கி கொசு வளர்வதற்கான சூழல் காணப்பட்டதால், அந்த நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியில் கடந்த 8 நாட்களில் மட்டும் 387 பேருக்கு 20 லட்ச ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.