புரோ கபடி லீக் : பெங்கால் வாரியர்ஸ் அணி சாம்பியன்

புரோ கபடி லீக்கின் 7வது தொடரின் இறுதிப்போட்டி குஜராத்தில் நேற்று நடைபெற்றது. இதில் தபாங் டெல்லி மற்றும் பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதின.

கடந்த ஜூலை மாதம் தொடங்கிய இந்த தொடரில் 12 அணிகள் இடம்பெற்று பல்வேறு இடங்களில் விளையாடி வந்தன.

அகமதாபாத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் பெங்கால் வாரியர்ஸ் அணியும், தபாங் டெல்லி அணியும் மோதின.

விறுவிறுப்பான இந்தப் போட்டியின் முதல்பாதியில் இரு அணிகளும் 17-17 என்ற புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தன.

இதனால் வெற்றி யாருக்கு என்ற எதிர்பார்ப்பு அதிகமாகியது.

டெல்லி அணியின் நவீன்குமார் கடுமையாகப் போராடி 18 புள்ளிகள் எடுத்தும், அந்த அணியால் தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை.

இறுதியில் 39-34 என்ற புள்ளிக் கணக்கில் பெங்கால் வாரியர்ஸ் அணி வெற்றி பெற்றது.

சாம்பியன் பட்டம் வென்ற பெங்கால் வாரியர்ஸ் அணிக்கு ரூ.3 கோடியும், 2-வது இடம் பெற்ற தபாங் டெல்லி அணிக்கு ரூ.1.8 கோடியும் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.

மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு பெங்கால் அணிக்கு சாம்பியன் கோப்பையை வழங்கினார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே