பெண்கள் சபரிமலைக்கு வந்தால் ஆண்களின் கவனம் சிதறும் – பாடகர் யேசுதாஸ்

பெண்கள் சபரிமலைக்கு வருவதைத் தவிர்க்க வேண்டும் என பாடகர் யேசுதாஸ் அறிவுறுத்தி இருக்கிறார்.

சென்னையில் இசை வெளியீட்டு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பாடகர் யேசுதாஸ் பெண்கள் சபரிமலைக்கு வந்தால் ஐயப்பனை ஒன்றும் செய்யாது எனவும்;

ஆனால் விரதம் இருந்து வரும் பக்தர்களின் கவனம் திசை திரும்பும் எனவும் குறிப்பிட்டார்.

இதன் காரணமாக பெண்கள் சபரிமலைக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

கால மாற்றத்திற்கு ஏற்ப ஆண்களைப் போல பெண்களும் சபரிமலைக்கு செல்லவேண்டும் என நினைக்கின்றார்கள் எனவும்; சபரிமலையை தவிர்த்து மற்ற கோவில்களுக்கு பெண்கள் செல்ல வேண்டும் என ஏசுதாஸ் கூறினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே