கடலூர் மீன் சந்தையில் அலைமோதும் மக்கள் கூட்டம்

புரட்டாசி மாதம் முடிந்து முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் கடலூர் மீன் சந்தையில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

புரட்டாசி மாதத்தில் பெரும்பாலோனோர் அசைவ உணவுகளை தவிர்த்து வருவது வழக்கம்.

புரட்டாசி மாதம் முடிந்து இன்று முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் கடலூர் முதுநகர் மீன்பிடி துறைமுகத்தில், அதிகாலை 3 மணி முதலே ஆயிரக்கணக்கான மக்கள் மீன் வாங்க குவிய தொடங்கினர்.

மீன்கள் வரத்து குறைவால், அனைத்து மீன்களின் விலையும் சற்று உயர்ந்து காணப்படுகிறது.

முதுநகர் பகுதியில் மக்கள் கூட்டம் அலை மோதியதால், சிதம்பரம் சாலையில் போக்குவரத்து சற்று பாதிக்கப்பட்டது.

இதேபோல், இறைச்சி கடைகளிலும் மக்கள் கூட்டம் அதிகரித்தே காணப்பட்டது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே