நீங்களும் வாங்கலாம் தனி நாடு..! : வாங்குவது எப்படி?

நித்யானந்தாவை போல காசு இருந்தால் உலகில் யார் வேண்டுமானாலும் புதிய தீவை விலைக்கு வாங்கலாம்.

ஆனால் அதனை நாடாக அறிவிக்க முடியுமா?? அந்நாட்டை ஐ.நா. அங்கீகரிப்பது எப்படி??

உலகின் பல இடங்களில் உள்ள தீவுகள் விற்பனை செய்யப்படுகின்றன. பெரும் கோடீஸ்வரர்களால் பல்லாயிரம் கோடி ரூபாய் கொடுத்து இந்த தீவுகள் விலைக்கு வாங்கப்படுகின்றன.

இப்படி விலைக்கு வாங்கப்படும் நிலப்பரப்பை தனி நாடாக அறிவிக்க அதன் உரிமையாளர் ஐக்கிய நாடுகள் சபையை தான் அணுக வேண்டும்.

ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தில் குறிப்பிட்டுள்ள வழிமுறைகளை ஏற்றுக்கொள்ளும், அமைதியை நேசிக்கும் எந்த ஒரு தீவோ, நிலப்பரப்போ தன்னை ஒரு நாடாக அறிவித்துக் கொள்ள ஐ.நா. வழிவகை செய்கிறது.

அப்படி அறிவிக்கப்படும் நாடுகள் ஐ.நா.வால் அங்கீகரிக்கப்படவேண்டும்.

அந்த அங்கீகாரத்தை பெறுவதற்கும் சில கட்டுப்பாடுகள் மற்றும் சட்ட திட்டங்களை ஐ.நா. வகுத்து அளித்திருக்கிறது.

இந்த சட்ட வழிமுறைகளை பின்பற்றும் எந்த நாடும் ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்பினராக சேர்க்க அனுமதிக்கப்படுகின்றன.

ஐக்கிய நாடுகள் சபை ஒரு தனி அரசாங்கமோ, அமைப்போ அல்ல; எனவே ஒரு நாட்டையோ அல்லது அரசாங்கத்தையோ அங்கீகரிக்க ஐ.நா.விற்கு மட்டுமே எந்த அதிகாரமும் இல்லை.

ஒரு புதிய நாட்டை உறுப்பினராக ஒப்புக் கொள்ளலாம் அல்லது புதிய அரசாங்கத்தின் பிரதிநிதிகளின் சான்றுகளை ஏற்றுக்கொள்ளலாம்.

ஆனால் ஒரு புதிய நாட்டை அங்கீகரிப்பதற்கு ஐ.நா. மட்டுமே மனது வைத்தால் முடியாது.

ஐ.நா.வில் உறுப்பினராக இருக்கும் மற்ற நாட்டு அரசுகளும் இதனை வழி மொழிந்தால் மட்டுமே ஒரு புதிய அரசு தங்களை புதிய நாடாகப் பிரகடனப் படுத்திக் கொள்ள முடியும்.

மற்ற நாடுகளுடனான பொதுவான உறவுகளை உறுதிப்படுத்தவே இந்த சட்டமுறைகள் ஏற்படுத்தப்பட்ட இருப்பதாக ஐ.நா.வே கூறி இருக்கிறது.

அதோடு எப்படி ஒரு புதிய நாட்டை பிரகடனப் படுத்துவது என்பதற்கான வழிமுறைகளையும் ஐ.நா. வகுத்து அளித்திருக்கிறது.

  • புதிய நாடாக அறிவிக்கக் கோரும் விண்ணப்பத்தை ஐநா சபையின் பொதுச் செயலாளருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
  • ஒரு அரசாங்கத்தை கட்டமைக்க ஐ.நா. வகுத்திருக்கும் சட்டதிட்டங்களை ஏற்றுக்கொள்வதாக ஒப்புதல் அளிக்கும் முறையான கடிதத்தையும் அந்த விண்ணப்பத்தோடு இணைக்க வேண்டும்.
  • ஐ.நா.வின் பாதுகாப்பு கவுன்சில் இந்த விண்ணப்பத்தை முதலில் ஆராய்கிறது.
  • இந்த கோரிக்கை தொடர்பாக ஐ.நா. கவுன்சில் உறுப்பினர்கள் இடம் போட்டி நடத்தப்படுகிறது.
  • கவுன்சிலில் உள்ள 15 உறுப்பினர்களே குறைந்தபட்சம் ஒன்பது ஓட்டுகளை பெற வேண்டும்.
  • மேலும் வீட்டோ அதிகாரம் கொண்ட ரஷ்யா, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா ஆகியோரின் ஓட்டுகளை கட்டாயம் பெற்றிருக்க வேண்டும்.
  • அவர்கள் எதிராக வாக்களித்தால் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.
  • புதிய நாட்டின் உறுப்பினர் சேர்க்கை ஐ.நா. கவுன்சிலால் பரிந்துரைக்கப்பட்டுவிட்டால், அடுத்ததாக பொது சபையில் வாக்கெடுப்புக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
  • ஐ.நா. சபையில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பெற்று விட்டால் புதிய நாடு தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்படும்.
  • தீர்மானம் நிறைவேறிய தேதியிலிருந்து புதிய நாடு அறிவிக்கப்பட்டு ஐ.நா.வில் உறுப்பினராகவும் சேர்த்துக் கொள்ளப்படும்.

உலகின் பல பகுதிகளிலும் இது போன்று பல தீவுகள் விற்பனை செய்யப்படுகின்றன.

ஆனால் அவை அனைத்துமே தனி நாடாக தங்களை அறிவிக்கக்கோரி ஐ.நா.வை அணுகுவதில்லை.

தற்போது கரீபியன் தீவுகளில் கைலாஷ் என்ற புதிய தீவை வாங்கி உள்ள நித்யானந்தா அந்த தீவை தனி நாடாக அறிவிக்கும் முயற்சிகளில் இறங்கி இருக்கிறார்.

ஐ.நா.வின் இத்தகைய விதிமுறைகளை கடந்து அவரது முயற்சி பலிக்குமா?? என்பது மில்லியன் டாலர் கேள்வியாகவே இருக்கிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே