ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் குயின் வெப் சீரிஸின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
கவுதம் மேனன் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை வெப் சீரிஸாக இயக்கியுள்ளார்.
இதில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளார்.
மலையாள நடிகர் இந்திரஜித் சுகுமாறன் எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
எம்.எக்ஸ் பிளேயர் தயாரிக்கும் இந்த வெப் சீரிஸின் டிரெய்லரை மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு நாளான இன்று வெளியிடப்பட்டுள்ளது.
டீசரின் அடுத்தகட்டமாக டிரெய்லரில் ஜெயலலிதாவின் பள்ளிப் பருவம், திரைத்துறை வாழ்க்கை, அரசியல் என அனைத்தும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவாக நடித்திருக்கும் ரம்யா கிருஷ்ணனுக்கு சக்தி ஷேஷாத்ரி என்று பெயரிடப்பட்டுள்ளது. ஜி.எம்.ஆர் கதாபாத்திரம் எம்.ஜி.ஆர் ஆக சித்தரிக்கப்பட்டுள்ள நிலையில், அந்தக் கேரக்டர் ரம்யா கிருஷ்ணனிடம் ராணி என்று கூறும் காட்சியும், முத்தக் காட்சியும் இடம்பெற்றுள்ளது.
டிரெய்லர் வெப் சீரிஸை பார்த்தேயாக வேண்டும் என்ற எதிர்பார்ப்பை பார்வையாளர்களிடத்தில் ஏற்படுத்தியுள்ளது.
இந்த வெப் சீரிஸில் கிடாரி திரைப்பட இயக்குநர் பிரசாத் முருகேசன் கவுதம் மேனனுடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.
டிசம்பர் 14-ம் தேதியில் இருந்து இந்த வெப் சீரிஸை பார்த்து ரசிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.