புதுச்சேரியில் மதுபானங்கள் மீதான கொரோனா வரி நீட்டிப்பு..!!

புதுச்சேரியில் மதுபானங்களுக்கான கொரோனா வரியை ஜனவரி 31 ஆம் தேதி வரை நீட்டித்து துணை நிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவு பிறப்பித்துள்ளார்

கொரோனா வைரஸ் பாதிப்பால் தமிழகத்தில் டிசம்பர் 31 ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டதைப் போல, புதுச்சேரியிலும் ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது.

ஆனால் ஊரடங்கில் தமிழகத்தை போலவே, புதுச்சேரியிலும் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.

இதனிடையே தமிழகத்தில் விற்கப்படாத மதுபானங்களை புதுச்சேரியில் விற்றால் அதற்கு கூடுதலாக 25% கொரோனா வரியும்; புதுச்சேரியில் விற்கப்படும் சாராயத்துக்கும் 20% கொரோனா வரியும் விதித்து அம்மாநில அரசு கடந்த ஐந்து மாதங்களுக்கு முன் அரசாணை வெளியிட்டது.

புதுச்சேரியில் விற்பனை செய்யப்படும் மதுபானங்களுக்கு விதிக்கப்பட்ட கொரோனா வரி நவம்பர் 30 ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என துணை நிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டார்.

இந்நிலையில் புதுச்சேரியில் மதுபானங்கள் மீதான கொரோனா வரி மேலும் 2 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

2021 ஜனவரி 31 ஆம் தேதி வரை நீட்டித்து துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே