சுர்ஜித் உயிருடன் மீண்டு வர பிரார்த்திக்கும் நெஞ்சங்கள்..!!

பூமிக்கு அடியில் சிக்கி தவிக்கும் சுர்ஜித் உயிருடன் மீண்டு வர ஆண்டவனை பிரார்த்திப்பதாக நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

தீபாவளியை முன்னிட்டு தனது ரசிகர்களுக்கு வாழ்த்து கூறுவதற்காக செய்தியாளர்களை சந்தித்த ரஜினி, மீட்பு பணிகளில் அரசை குறை கூற முடியாது என்றார்.

ஆழ்துளை கிணற்றில் பள்ளம் தெரியாமல் சிறு குழந்தைகள் விழுவது தமிழகத்தில் ஒரு தொடர் அவலமாக இருப்பதாக மக்கள் நீதி மய்ய தலைவர் கமலஹாசன் கூறியிருக்கிறார்.

இதுகுறித்து டிவீட்டரில் பதிவிட்டுள்ள அவர், குழந்தையை மீட்கும் பணி வெற்றி பெற வேண்டுமென தெரிவித்துள்ளார். அத்துடன் ஆழ்துளை கிணறுகளை மூடாமல் விடுபவர்களுக்கு பெரும் அபராதம் விதிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆழ்துளை கிணற்றை இத்தனை ஆண்டுகாலம் மூடாமல் இருந்தது மிகப்பெரும் தவறு என திமுக பொருளாளர் துரைமுருகன் கூறியிருக்கிறார்.

குழந்தை சுர்ஜித் ஆழ்துளை கிணற்றில் சிக்கியது தொடர்பாக துரைமுருகன் ஆடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

அதில் சுர்ஜித் மீண்டும் உயிருடன் வந்தால் பெரும் மகிழ்ச்சி அடைவோம் என்றும் குழந்தையை மீட்க பாடுபடும் அனைவரையும் பாராட்டுகிறேன் என்றும் கூறியிருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே