தஞ்சாவூர் பெரிய கோவிலில் இரண்டாம் நாளாக யாக சாலை பூஜை

தஞ்சை பெரிய கோவிலில் குடமுழுக்கிற்கான யாகசாலை பூஜைகள் தொடங்கின.

வரும் 5-ம் தேதி நடைபெறவுள்ள குடமுழுக்கிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் 13 அடி உயர பெருவுடையாருக்கு அஷ்டபந்தன மருந்து சாத்தப்பட்டது. அதைதொடர்ந்து கோவிலில் யாகசாலை பூஜைகள் முறைப்படி தொடங்கின.

பெரியகோவில் அருகே உள்ள பெத்தண்ணன் கலையரங்கத்தில் 22 ஆயிரம் சதுரஅடி பரப்பளவில் யாகசாலை அமைக்கப்பட்டுள்ளது.

இதில் 110 யாக குண்டங்கள், 22 வேதிகைகள் அமைக்கப்பட்டுள்ளன.

பூஜையில் 300 சிவாச்சாரியார்களும், 60 ஓதுவார்களும் பங்கேற்றுள்ளனர்.

காவிரி, கங்கை, யமுனா, கோதாவரி, தாமிரபரணி உள்ளிட்ட பல்வேறு புண்ணிய ஆறுகளில் இருந்தும் கொண்டு வரப்பட்ட புனிதநீர் நிரப்பப்பட்ட கடங்கள் யாகசாலை பூஜையில் வைக்கப்பட்டுள்ளன.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே