கரூரில் நடைபெற்ற தமிழி உலக சாதனை திருவிழா

கரூர் பரணிபார்க் கல்விக் குழுமம், சாரணர் மாவட்டம்,  திருவள்ளுவர் மாணவர் இளைஞர் இயக்கம் மற்றும் வளர்ச்சி அறக்கட்டளை இணைந்து கரூர் பரணிபார்க் பள்ளி வளாகத்தில் சங்க இலக்கிய நூல்களை தமிழி எழுத்து வடிவத்தில் புத்தகங்களாக ஆவணப்படுத்தும் உலக சாதனை நிகழ்ச்சி கரூரில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பரணிபார்க் கல்விக் குழும தாளாளர் மோகனரங்கன், செயலர் பத்மாவதி தலைமை தாங்கினர். அறங்காவலர் சுபாஷினி முன்னிலை வகித்தார்.

சங்க இலக்கிய அறிஞரும் மதுரை காமராசர் பல்கலைக் கழக தமிழியல் புலம் தலைவருமான பேராசிரியர் முனைவர். இராமராஜபாண்டியன்,  கல்வெட்டு ஆய்வாளர் ஓய்வு பெற்ற தமிழாசிரியர் கருப்பண்ணன் ஆகியோர் சிறப்பு விருந்தினராகவும், உலக சாதனை புத்தக நடுவர் டிராகன் ஜெட்லீ நடுவராகவும் கலந்து கொண்டனர். 

பரணிபார்க் கல்விக் குழும முதன்மை முதல்வரும் திருவள்ளுவர் மாணவர் இளைஞர் இயக்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், மாநிலம் முழுவதும் தமிழி எழுத்துக்களை பயிற்சி அளித்து வருபவருமான முனைவர் ராமசுப்பிரமணியன் தலைமையில் பரணிபார்க் கல்விக் குழுமத்தின் தமிழி எழுத்துப் பயிற்சி பெற்ற 4500 சாரணர் ஆசிரியர்களும், மாணவர்களும் இணைந்து சங்க இலக்கியத்தின் 36 நூல்களையும் தமிழி எழுத்து வடிவத்தில் புத்தகங்களாக ஆவணப்படுத்தும் உலக சாதனை முயற்சியில் கலந்துகொண்டனர்.

பதிற்றுப்பத்து நூல் 3 நிமிடம் 41 நொடிகள் தமிழி எழுத்து வடிவில் எழுதி முடித்தனர்.

நிறைவாக நற்றிணை  சங்க இலக்கிய நூல் 24 நிமிடம் 55 வது நொடியில் எழுதி முடிக்கப்பட்டது.

25 நமிடத்தில் சங்க இலக்கியங்களில் பதினெண்மேற்கணக்கு நூல்கள், பதினெண் கீழ்க்கணக்கு நூல்களும் மொத்தம் 36 நூல்களும் முழுமையாக தமிழி எழுத்தில் ராமசுப்பிரமணியன் தலைமையிலான ஆசிரியர்கள் மாணவர்கள் 4500 பேர் குழுவினரால் 24 நிமிடம் 55 நொடியில் எழுதி முடிக்கப்பட்டது.

இன்று எழுதி முடிக்கப்பட்ட கையெழுத்து பிரதிகள் அனைத்தையும் புத்தகமாக வெளியிட்டு சங்க இலக்கிய நூல்களை தமிழி வடிவிலான புத்தகங்களாக ஆவணப்படுத்தப்படவுள்ளன.

பரணிபார்க் கல்வி குழும முதன்மை முதல்வர் ராமசுப்ரமணியன் தலைமையில் பரணி வித்யாலயா முதல்வர் சுதாதேவி பரணிபார்க் முதல்வர் சேகர், குமாரசாமி கல்வியியல் கல்லூரி முதல்வர் முனைவர் சாந்தி, பரணி  பார்க் சாரணர் மாவட்ட செயலர் பிரியா மற்றும் துணை முதல்வர்கள் ஆசிரியர்கள் இதற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.

நமது செய்தியாளர் : மு.மணிகண்டன்

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே