தஞ்சை பெரிய கோவிலில் இராஜராஜ சோழன் சதயவிழா

தஞ்சாவூர் பெரிய கோயிலில் மாமன்னன் ராஜராஜ சோழனின் 1034  சதய விழா கோலாகலமாகத் துவங்கியது.

சதய விழா என்பது ராஜராஜ சோழன் பதவி ஏற்ற நாளைக் கொண்டாடும் விழாவாகும்.

தஞ்சை பெரிய கோவில் என அழைக்கப்படும் பிரகதீஸ்வரர் கோயிலை மாமன்னன் ராஜராஜ சோழன் கட்டி எழுப்பினார்.

1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயில் என்ற பெருமையுடன் இன்றும் நிலைத்து நின்று அவரது புகழை எடுத்துரைக்கிறது.

தஞ்சை பகுதியை ஆண்ட மாமன்னன் ராஜராஜ சோழனின் 1034வது சதய விழா நாளை கோலாகலமுடன் கொண்டாடப்பட இருக்கிறது. இதனை முன்னிட்டு தஞ்சையில் நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த விடுமுறையை அடுத்து, (நவம்பர் 6ம் தேதிக்கு பதிலாக) நவம்பர் 23ம் தேதி மாற்று வேலைநாளாக செயல்படும் என்று மாவட்டக் கலெக்டர் அண்ணாதுரை அறிவித்து உள்ளார்.

தஞ்சை பெரிய கோயிலில் மாமன்னன் ராஜராஜ சோழனின் சதய விழா மங்கள இசையுடன் இன்று தொடங்கியுள்ளது.

இதனை தொடர்ந்து சிலைக்கு மாலை அணிவிப்பு மற்றும் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நாளை நடைபெறும்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே