இன்றுமுதல் திருப்பதியில் பக்தர்களுக்கு இலவச தரிசனத்திற்கு அனுமதி. 

திருப்பதி ஏழுமலையான் கோவிலில், கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த சில மாதங்களாக, இலவச சுவாமி தரிசனம் நடைமுறை கடந்த சில மாதங்களாக நிறுத்தப்பட்டிருந்தது. 

இந்த நிலையில், கொரோனா தொற்று குறைந்து வந்ததையடுத்து, இலவச தரிசனத்திற்கு கடந்த 8-ஆம் தேதி முதல் கிட்டூர் மாவட்ட பக்தர்களுக்கு மட்டும், நாள்தோறும் 2,000 டோக்கன்படி வழங்கப்பட்டது.

இந்நிலையில், கொரோனாவின் தாக்கம் படிப்படியாக குறைந்துள்ளதால், இன்று முதல் இலவச தரிசனத்திற்கு அனைத்து பக்தர்களுக்கும் டோக்கன் வழங்கப்படும் என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

அதன்படி, 8,000 இலவச டோக்கன் வழங்கப்படுகிறது. அதாவது கொரோனா கட்டுப்பாட்டு விஹிமுறைகளை முறையாக கடைபிடிக்க நிலையில், இரவு 11:30 மணி வரை இலவச தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே