வில்சன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும்

களியக்காவிளையில் வாகன சோதனை சாவடியில் சுட்டுக்கொல்லப்பட்ட வில்சன் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, களியக்காவிளையில் வாகன சோதனையின்போது சுட்டுக்கொலை செய்யப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் குடும்பத்தினருக்கும் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்தார்.

அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் எனவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார். 

குற்றவாளிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும்,  குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்பட்டு கடுமையான தண்டனை வழங்கப்படும் என்றும் சுட்டப்பேரவையில் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும், திருவள்ளூரில் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற ஆட்டோ ஓட்டுநரை துரத்தி சென்றபோது உயிரிழந்த யாகேஷின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று தெரிவித்தார். 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே