பிரசவத்திற்கு மருத்துவமனை கிடைக்காததால் ஆம்புலன்சிலே உயிரிழந்த கர்ப்பிணி…

தில்லியில் பிரசவம் பார்க்க மறுத்து அலைக்கழிக்கப்பட்ட கர்ப்பிணி 13 மணிநேரத்தில் ஆம்புலன்சிலே பலியான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டா-காசியாபாத் எல்லையில் கோடா காலனியைச் சேர்ந்தவர் விஜேந்தர் சிங் (30). இவரது மனைவி நீலம் (30), 8 மாத கர்ப்பிணியாக இருந்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் நீலத்துக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.

இதையடுத்து ஆம்புலன்சை வரவழைத்து, வழக்கமாக மருத்துவ பரிசோதனை பெற்று வந்த தனியார் மருத்துவமனைக்கு கணவர் விஜேந்தர் சிங், அவரை அழைத்துச் சென்றார்.

ஆனால், கரோனா நோயாளிகள் இருப்பதால் மருத்துவமனையில் படுக்கை இல்லை எனக்கூறி கர்ப்பிணியை அனுமதிக்க மறுத்து விட்டனர். 

இப்படி 8 மருத்துவமனைகளில் அலைக்கழிக்கப்பட்ட கர்ப்பிணி நீலம், பிரசவ வேதனையில் 13 மணி நேரத்தில் ஆம்புலன்சிலேயே இறந்துவிட்டார்.

மேலும் அவரது வயிற்றில் இருந்த குழந்தையும் இறந்துவிட்டது.

இதனிடையே இறந்த கர்ப்பிணிக்கு கரோனா அறிகுறி இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தில்லி, உத்தரப்பிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து கௌதம புத்தா நகர் மாவட்டஆட்சியர் சுஹாஸ், விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காததால், கௌதம புத்தா நகர் மாவட்டத்தில் கடந்த 2 வாரத்தில் நடக்கும் 2-ஆவது உயிரிழப்பு இதுவாகும்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே