பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் கடந்த 25 நாட்களில் உண்டியல் காணிக்கையாக 2 கோடியே 57 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளது.
முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு கடந்த 25 நாட்களில் பக்தர்களின் வருகை அதிகளவில் காணப்பட்டன.
வருகை தந்த பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றியதுடன் உண்டியல்களிலும் காணிக்கையை அதிகளவில் செலுத்தியிருந்தனர்.
இதனால் உண்டியல்கள் நிரம்பின. இதையடுத்து, கோயில் உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்பட்டன.
இதில் ரொக்கமாக இரண்டு கோடியே 57 லட்சத்து, 41 ஆயிரத்து, 520 ரூபாய் வருவாயாக கிடைத்துள்ளது.
மேலும் தங்கம் 670 கிராமும், வெள்ளி 12 ஆயிரத்து 300 கிராமும் கிடைத்தன.
மேலும், மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, ஐப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளின் கரன்சிகளும் காணிக்கையாக கிடைத்துள்ளன.