ஊரடங்கு மேலும் நீட்டிப்பா ? – மே 2 ஆம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம்

முதல்வர் இ.பி.எஸ்., தலைமையில் வரும் மே 2ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு வரும் மே 3 ம் தேதி முடிவடைய உள்ளது.

இது நீட்டிக்கப்படுமா அல்லது கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுமா என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது.

ஊரடங்கு தொடர்பாக நிபுணர் குழு மற்றும் மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில், முதல்வர் இ.பி.எஸ்., தலைமையில், வரும் 2ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்தில் ஊரடங்கு தொடர்பாக ஆலோசனை நடத்தப்படலாம் எனக் கூறப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே