கர்ப்பிணி மனைவியுடன் வறுமையில் வாடிய இஸ்லாமிய தம்பதியினருக்கு நடிகர் விஜய் பண உதவி செய்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசியைச் சேர்ந்த அமீன், கண்சுலாபீவி இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டநிலையியல் கடந்த ஜனவரி மாதம் தேனியில் குடியேறி உள்ளனர்.
அமீன் தினக்கூலி வேலை பார்த்துவந்த நிலையில் கடந்த ஒன்றரை மாதமாக ஊரடங்கு காரணமாக வேலைக்கு செல்லவில்லை.
இதனிடையே கண்சுலா பீவி 5 மாத கர்ப்பமாக இருந்துள்ளார்.
இவர்களுக்கு குடும்ப அட்டையும் இல்லாததால் ரேஷன் பொருட்கள் கூட வாங்க முடியாமல் தவித்து வந்துள்ளனர்.
மேலும் 5 மாத கர்ப்பிணி மனைவிக்கு மருத்துவச் செலவிற்கு கூட பணம் இல்லாமல் இருவரும் தவித்து வந்துள்ளார்.
இந்த தகவல் தேனி விஜய் ரசிகர் மன்றத்தினர் மூலம் நடிகர் விஜய்யின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
விஷயம் அறிந்த விஜய் உடனே அவர்களுக்கு உதவி செய்ய முன்வந்துள்ளார்.
மருத்துவ செலவுக்கு மட்டும் பணம் தந்தால் போதும் என அமீன் கேட்டுக்கொண்டதை அடுத்து அவர்களுக்கு ஐந்தாயிரம் ரூபாயை தேனி மாவட்ட விஜய் ரசிகர்மன்ற நிர்வாகிகள் சார்பாக நடிகர் விஜய் கொடுத்துள்ளார்.