சேலம் மாவட்டத்தில் இரவு முழுவதும் கொட்டித் தீர்த்த கனமழையால் சூரமங்கலம், செந்நெறி, வயக்காடு, அழகாபுரம், களரம்பட்டி, கருங்கல்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது.
சேலம் மாநகர பகுதியில் இரவு தொடங்கி விடிய விடிய கொட்டித் தீர்த்தமழையால் ஏரிகளில் இருந்து வெளியேறிய உபரி நீர் ஊருக்குள் புகுந்ததால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகினர்.
இடைவிடாது பெய்த மழையால் 10 ஆண்டுகளுக்குப் பிறகு சேலம் அருகே உள்ள செங்கல் அணை நிரம்பி வழிகிறது.
திருமணிமுத்தாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.