வாக்கு எண்ணிக்கை முடிவுகள் நாளை காலை வரை நீடிக்கும்

வாக்கு எண்ணிக்கை முடிவுகள் நாளை காலை வரை நீடிக்க வாய்ப்பு உள்ளதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வாக்குகள் கோவில்பட்டியில் லட்சுமி மேல்நிலைப் பள்ளியிலும், கயத்தாறு ஒன்றியத்துக்கு உட்பட்ட வாக்குகள் கோவில்பட்டி எஸ்.எஸ் துரைசாமி நாடார் கல்லூரியிலும் எண்ணப்பட்டு வருகின்றன.

இந்த மையங்களை நேரில் ஆய்வு செய்த தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

வாக்கு எண்ணிக்கை பணிகள் இன்று இரவு அல்லது நாளை அதிகாலை வரை கூட நீடிக்க வாய்ப்பு உள்ளதாகவும்; எந்தவிதமான சட்ட ஒழுங்கு பிரச்சனைகளும் ஏற்படவில்லை எனவும் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே