சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கிய காவலரின் மனைவி

ராஜஸ்தானில் காருக்கு சுங்க கட்டணம் கேட்ட ஊழியர்களை போலீஸ்-இன் மனைவி திட்டியதுடன், சுங்கச்சாவடியை சூறையாடினார்.

மத்தியபிரதேச தலைமை காவலர் சுமன் என்பவர் தனது குடும்பத்துடன் ராஜஸ்தான் கோட்டா மாவட்டத்தில் சுங்கச் சாவடி வழியாக சென்று உள்ளார்.

அப்போது டிஜிட்டல் முறையில் சுமன் கட்டணம் செலுத்திய தாக கூறப்படுகிறது. எனினும் ஊழியர்கள் பணமாக கேட்டுள்ளனர்.

இதனால் இருதரப்பினருக்கும் வாக்குவாதம் முற்றியதால் முதலில் சுங்க ஊழியர்கள் சுமனின் காரை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.

பின்னர் கொந்தளித்த சுமனின் மனைவி, இரும்புகம்பியால் சாவடியை அடித்து உடைத்து நொறுக்கி துவம்சம் செய்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே