பஞ்சாப் மாநிலம் சண்டிகர் பல்கலைக்கழகத்தில் விடுதி மாணவிகள் குளிக்கும் வீடியோவை ஆபாசமாக படம் பிடித்து ஆன்லைனில் பரப்பிய சக மாணவி கைது செய்யப்பட்டுள்ளார்.

பஞ்சாப் மாநிலம் மோகாலியில் அமைந்துள்ளது சண்டிகர் பல்கலைக்கழகம். இங்கு ஏராளமான மாணவிகள் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். இங்கு சுமார் 60 மாணவிகளின் வீடியோக்கள் இணையதளத்தில் வெளியானது. பல்கலைக்கழக விடுதி குளியல் அறையில், ரகசிய கேமரா வைத்து மாணவிகள் குளிப்பதை படம்பிடித்தது தெரியவந்தது. இந்த வீடியோக்கள் வெளியான அடுத்து, சம்பந்தப்பட்ட மாணவிகள் 8 பேர் தற்கொலைக்கு முயன்றுள்ளனர். அவர்களில் ஒருவர் உயிரிழந்துவிட்டதாகவும், 3 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவமனையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து மாணவிகள் நீதி கேட்டு பல்கலைக்கழக வளாகத்திலேயே போராட்டத்தை தொடங்கி விட்டனர்.

பின்னர் இதுகுறித்து பஞ்சாப் போலீஸார் விசாரணை தொடங்கியதில், அதே விடுதியில் தங்கி படித்து வரும் மாணவி ஒருவர் சுமார் 60 மாணவிகளின் குளியல் வீடியோக்களை பதிவு செய்து, அதனை தனது ஆண் நண்பருடன் பகிர்ந்து கொண்டது தெரிய வந்தது. தனது ஆண் நண்பர் கேட்டதால் அவ்வாறு வீடியோ பதிவு செய்து அனுப்பியதாக அந்த மாணவி கூறியிருக்கிறார். அத்துடன் அந்த வீடியோக்கள் பார்ன் ( ஆபாச) தளத்திற்கும் விற்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து அந்த மாணவியை கைது செய்த போலீஸார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இறந்தபோதிலும் மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்த பஞ்சாப் கல்வித் துறை அமைச்சர் ஹர்ஜோத் சிங், “பல்கலைக்கழக மாணவர்கள் அமைதி காக்க வேண்டும். குற்றவாளிகள் யாரும் தப்பிக்க முடியாது. இது மிகவும் உணர்ச்சிகரமான விஷயம் நமது சகோதரிகள் மற்றும் மகள்களின் கண்ணியம் தொடர்பானது. இது நமது சமூகத்திற்கான இப்போதைய சோதனை. இதை முறியுடிக்க வேண்டும். இந்த சம்பவம் தொடர்பாக மாணவி கைது செய்யப்பட்டு இருக்கிறார். தொடர்ந்து தீவிர விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என்று தெரிவித்திருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே