சூரசம்ஹாரத்துடன் இன்று நிறைவடைகிறது தசரா

குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா விழா இன்று சூரசம்ஹாரத்துடன் நிறைவடைகிறது.

பிரசித்தி பெற்ற தசரா விழாவுக்காக பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை துவக்கினர். 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் காளி உள்ளிட்ட வேடமணிந்த பக்தர்கள் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் வசூல் செய்து காணிக்கையை கோவிலில் கொண்டு வந்து செலுத்தினர்.

விழாவின் இறுதி நாளான இன்று நள்ளிரவு 12 மணிக்கு அம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி மகிஷாசுரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடைபெற இருக்கிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே