இலங்கையில் புதிய அதிபராக பொறுப்பேற்கவுள்ள கோத்தபய ராஜபக்ச யார்? அவரது அரசியல் பயணம் குறித்த தகவல்களை தற்போது காணலாம்.

  • 2019 இலங்கை அதிபர் தேர்தலில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா கட்சியின் அதிபர் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி  பெற்றுள்ள கோத்தபய ராஜபச்சே, முன்னாள் அதிபர் மஹிந்தா ராஜபக்சவின் சகோதரர் ஆவர்.
  • 2015ம் ஆண்டு வரை 10 ஆண்டுகள் மஹிந்தா ராஜபக்ச அதிபராக இருந்தபோது, இலங்கை அரசின் பாதுகாப்புத்துறை செயலாளராக கோத்தபய ராஜபக்சே பணியாற்றினார்.
  • தமிழீழப் விடுதலை போரில் விடுதலைப்புலிகளை தோற்கடித்ததில் முக்கிய பங்கு வகித்தவர் கோத்தபய ராஜபக்ச.
  • விடுதலைப்புலிகளை தோற்கடிக்க சட்டத்திற்கு புறம்பான வழிகளை அவர் கையாண்டதாகவும்,
  • தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கும், பலர் காணாமல் போனதற்கும் இவர் காரணம் என்றும் கோத்தபய மீது குற்றச்சாட்டு உள்ளது. 
  • இலங்கை உள்நாட்டுப் போரின்போது உளவுத்துறையைப் பயன்படுத்தி, சட்டவிரோத கொலைகள், கடத்தல்கள், சந்தேகத்திற்குரியவர்களாக கருதப்படும் தமிழர்களை சித்ரவதை செய்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளும் கோத்தபய மீது உள்ளது.
  • அமெரிக்க குடியுரிமை ஆவணங்களை மறைத்து மோசடி செய்து, சட்டவிரோதமாக இலங்கை குடியுரிமை பெற்றிருப்பதாகவும் கோத்தபய ராஜபக்ச மீது குற்றச்சாட்டு உள்ளது.
  • மாநில புலனாய்வுப் பிரிவுக்கு அதிக அதிகாரம் கொடுத்து நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதே கோத்தபய ராஜபக்சவின் நோக்கமாக பார்க்கப்படுகிறது.
  • இலங்கையின் மக்கள் தொகையில் 75 சதவீதமாக உள்ள சிங்களர்களும், புத்த மதத்தை சார்ந்தவர்களும் கோத்தபய ராஜபக்சவிற்கு ஆதரவு தெரிவித்தது தான் அவரது வெற்றிக்கான காரணமாக பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே