மருதுபாண்டிய சகோதரர்கள் சிலைக்கு மாலை அணிவித்து முதல்வர் பழனிசாமி மரியாதை..!!

மதுரை தெப்பக்குளத்தில் உள்ள மருது பாண்டியர்கள் சிலைக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

முத்துராமலிங்கத் தேவரின் 113-ஆவது பிறந்த நாள் விழா மற்றும் 58ஆவது குருபூஜை இன்று கொண்டாடப்படுகிறது.

குருபூஜையையொட்டி பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் சிலைக்கு, முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வா் ஓ.பன்னீா் செல்வம் ஆகியோா் இன்று மரியாதை செலுத்துகின்றனா்.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை புறப்பட்டு சென்றார்.

முதற்கட்டமாக மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து இன்று மரியாதை செலுத்தினர். 

இந்த நிகழ்வில் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, சி. விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக இருவரும் சிலைக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்துக்கும் மலர் தூவி மரியாதை செலுதினார்கள்.

அதைத்தொடர்ந்து மதுரை தெப்பக்குளத்தில் உள்ள மருது பாண்டியர்கனின் திருவுருவச் சிலைக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்களும் மருதுபாண்டியர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மருதுபாண்டியர்கள் சிலைக்கு மரியாதை செலுத்திய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை ஓ.பன்னீர்செல்வத்துக்கு வீரவாள் பரிசாக அளிக்கப்பட்டது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே