அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார்…?

2021 சட்டமன்றத்தேர்தலில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார்? என்ற கேள்விக்கு நேற்று நடந்த அதிமுக பொதுக்குழுவில் அமைச்சர் தங்கமணி சூசகமாக பேசிய நிலையில், மாற்றுக்கருத்தும் வந்துள்ளது.

அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் அக்கட்சியின் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் நேற்று சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் நடந்தது.

2021-ம் ஆண்டு நடக்க உள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார்? என்ற கேள்வி சமீபத்தில் எழுந்தது.

கட்சியே இது பற்றி முடிவெடுக்கும் என்று நிர்வாகிகள் முதல் அமைச்சர்கள் வரை கூறி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று பொதுக்குழுவில் பேசிய அமைச்சர் தங்கமணி, 2021-ல் 234 தொகுதிகளிலும் வெற்றி பெற்ற எடப்பாடி பழனிசாமி கையில் ஒப்படைப்போம் என்று கூறினார்.

இதன்மூலம் எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர் வேட்பாளராக இருப்பார் என்று அமைச்சர் மறைமுகமாக உணர்த்தியதாக அரசியல் நோக்கர்கள் கூறினர்.

ஆனால் முதல்வர் வேட்பாளரை கட்சியே கூடி முடிவு செய்யும் என துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் மாறுபட்ட கருத்தை தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே