ஓ.பன்னீர் செல்வம் பற்றி குருமூர்த்தி பேசியது ஆணவத்தின் உச்சம் என்று சென்னை விமான நிலையத்தில் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியளித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.
துக்ளக் இதழின் ஆசிரியர் குருமூர்த்தி துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் தர்ம யுத்தம் பற்றிய விமர்சனத்திற்கு பதிலளித்த அவர், இது ஆணவத்தின் உச்சம், திமிர்வாதம், இவ்வளவு திமிர் கூடாது. நாவடக்கம் தேவை, பல சந்தர்ப்பங்களில் அதிமுகவின் மீது கைவைத்து அதனால் வாங்கிக் கட்டிக் கொண்டுள்ளார்.
ஒருவர் தான் ஆண் மகன் இல்லை என்றால் தான் சந்தேகம் ஏற்பட்டு மற்றவர்களை, நீ ஆம்பளையா…? நீ ஆம்பளையா…? என்று கேட்பார்கள். முதலில் இவர் ஆண் மகனா என்பதற்கு அவர் பதில் சொல்லட்டும் என்று கூறினார்.
2021 முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் முதல்வர் வேட்பாளரா என்ற கேள்விக்கு, வீணாக ஒரு குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம்.
இது கட்சிக்குள் நடக்கும் விஷயங்கள். உரிய நேரத்தில் கட்சி முடிவு செய்யும் என்று தெரிவித்தார்.