நடிகை ஸ்ருதிஹாசன் பங்கேற்ற கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதால் பரபரப்பு!

நடிகை ஸ்ருதிஹாசன் பங்கேற்ற கடை திறப்பு விழாவில், கூட்ட நெரிசல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

சென்னை ஆவடியில் தனியார் கடை திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நடிகை ஸ்ருதிஹாசன், ரிப்பன் வெட்டி கடையை திறந்து வைத்தார்.

ஆனால் ஸ்ருதிஹாசனை காண அதிகளவு கூட்டம் கூடியதால், கடையினுள் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

மேலும் அவருடன் செல்பி எடுக்க ஏராளமான இளைஞர்கள் முண்டியடித்து சென்றதால், தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

கூட்டத்தை கட்டுப்படுத்த போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாததால், நிகழ்ச்சியை பாதியிலேயே முடித்துக் கொண்டு நடிகை ஸ்ருதி ஹாசன் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே