21 நாள் ஊரடங்கு – கமல்ஹாசன் நறுக்

இந்தியாவில் 21 நாட்கள் லாக்டவுன் ஆன நிலையில் பெருமுதலாளிகளுக்கு மட்டும் உதவும் நேரம் இதுவல்ல என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக ஏப்ரல் மாதம் 15 ஆம் தேதிவரை ஊடரங்கை மோடி அமல்படுத்தினார்.

இந்தியாவில் சுயதனிமைப்படுத்தி விட்டால் 62 சதவீதம் பாதிப்பை எளிதில் தடுத்து விடலாம் என்று ICMR வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில் மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல் ஹாசன் பிரதமர் மோடியை விமர்சித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.

அதில்

  • இந்த திட்டம் வசதியுள்ளவரின் வாழ்க்கையை காப்பாற்றுவதில் மட்டும் அக்கறை செலுத்துவதுப் போல் அமைந்துள்ளது.
  • இந்த ஊடரங்கால் இந்தியாவிலுள்ள கூலித் தொழிலாளிகள் பெரும் துயரத்திற்கு ஆளாவார்கள்.
  • அவர்களின் வாழ்க்கையையும் நினைவு கொண்டு செயல்படுவது நல்லது. 
  • அவனை உதாசீனித்தவர் பதவி இழப்பர். இது சரித்திரம்.

நாட்டின் பிற பிரபலங்கள் மோடியின் திட்டத்திற்கு ஆதரவு தந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *