புதிய விதிகளின் படி அண்மையில் நடைபெற்ற தேர்தலில் பி.சி.சி.ஐ தலைவராக இந்திய அணி முன்னாள் கேப்டன் கங்குலி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்த நிலையில் மும்பையில் நேற்று நடைபெற்ற ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் பி.சி.சி.ஐ-யின் 39வது தலைவராக கங்குலி முறைப்படி பதவி ஏற்றார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கங்குலி, இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நம்பகத்தன்மையில் சமரசம் கிடையாது என்றார்.

இந்திய அணியை வழிநடத்தியது போல, பி.சி.சி.ஐ-யை சிறப்பாக நிர்வகிப்பேன் என்று அவர் குறிப்பிட்டார்.

தோனியின் எதிர்காலம் குறித்து இதுவரை அவரிடம் பேசவில்லை என்று கூறிய கங்கலி, சாம்பியன்கள் விரைவில் ஓய்வு பெற்று விட மாட்டார்கள் என்றும் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே