அவசர சிகிச்சை, அவசர அறுவை சிகிச்சை, காய்ச்சல் பிரிவில் பணியாற்றும் மருத்துவர்கள் தவிர மற்ற அனைத்து அரசு மருத்துவர்களும் நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்து உள்ளனர்.
வேலைநிறுத்தம் தொடர்பாக அரசு டாக்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் நடைபெற்றது.
முதுகலை பட்ட மேற்படிப்பு மருத்துவ மாணவர்களின் சேர்க்கையை கலந்தாய்வு மூலமாக நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக அரசு நடவடிக்கை எடுக்காததால் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக மருத்துவர்களின் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
தொடர்ந்து தமிழக அரசு தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், அவசர சிகிச்சை பிரிவில் இருக்கும் மருத்துவர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.